இந்தியா மீது வரி விதித்த டிரம்ப் - அமெரிக்காவுக்கு அதிர்ச்சி கொடுத்த சீனா
இந்தியா மீதான அமெரிக்காவின் வரிவிதிப்பு நடவடிக்கை - சீனா விமர்சனம்
வரி விதிப்புகளை அமெரிக்கா தவறாக பயன்படுத்துவதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்த அமெரிக்கா,
இந்திய இறக்குமதி பொருட்களுக்கு 50 சதவீத வரி விதித்துள்ளது. இந்நிலையில், வரி விதிப்புகளை அமெரிக்கா தவறாக பயன்படுத்துவதாகவும், இந்த விவகாரத்தில், சீனாவின் எதிர்ப்பு நிலையானது மற்றும் தெளிவானது என்றும், சீன வெளியுறவு செய்தித்தொடர்பாளர் குவோ ஜியாகுன் Guo Jiakun தெரிவித்தார். ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்தார். ரஷ்யாவிடம் இருந்து சீனா அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்கும் நிலையில், அமெரிக்காவின் வரிவிதிப்பு நடவடிக்கையை சீனா விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.