ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலையான எட்னா எரிமலையின் ஆபத்தான அழகை ரசிப்பதற்காக சுற்றுலா பயணிகள் பலரும் அங்கு குவிந்து வரும் நிலையில், சில அறிவுறுத்தல்களை மீட்பு குழுவினர் வழங்கியுள்ளனர். தீ பிழம்புகளை வெளியேற்றி வரும் எட்னா எரிமலையிலிருந்து குறைந்தது 50 மீட்டர் தொலைவில் இருக்க வேண்டும் என்ற விதிமுறைகள் கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்ய மீட்பு குழுவினர் தொடர்ந்து அங்கு பணியாற்றி வருகின்றனர்.