China | Sun | ஒரேநேரத்தில்.. வானில் தோன்றிய 3 சூரியன்..! மிரண்ட மக்கள் - சீனாவில் நடந்தது என்ன..?
சீனாவின் இன்னர் மங்கோலியா பகுதியில் ஒரே நேரத்தில் வானில் மூன்று சூரியன்கள் தோன்றியது போன்ற ஒரு அழகிய நிகழ்வு காண்போரை அதிசயிக்க வைத்தது... இதனை 'Sun dogs' என்று கூறுகிறார்கள்... பனிக்கட்டி படிவங்களுக்குள் சூரிய ஒளி பயணிக்கும் போது இது போன்ற வினோத நிகழ்வும் மிகப்பெரிய சூரிய வளையமும் உருவாகுவதை நம்மால் பார்க்க முடியும் என்கின்றனர், விஞ்ஞானிகள்...