South Africa | Trump | G20 | முக்கியமான நேரத்தில் டிரம்ப் வைத்த அதிரடி செக்
ஜி-20 உச்சி மாநாடு விவகாரத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கான நிதியுதவி அனைத்தும் நிறுத்திவைக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
நடப்பாண்டு ஜி-20 கூட்டமைப்புக்குத் தலைமை வகித்த தென் ஆப்பிரிக்கா, அதன் உச்சி மாநாட்டை ஜோஹன்னஸ்பெர்க்கில் நடத்தியது.
இதில், அடுத்த ஆண்டு ஜி20 கூட்டமைப்புக்குத் தலைமை வகிக்கும் அமெரிக்காவிடம், தலைமைப் பொறுப்பை முறையாக தென் ஆப்பிரிக்கா ஒப்படைக்க தவறியதாக விமர்சனம் எழுந்தது.
இதனால் அதிருப்தியடைந்த டிரம்ப், அடுத்த ஆண்டு மியாமியில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டில் தென் ஆப்பிரிக்காவுக்கு அழைப்பு விடுக்க மாட்டோம் என்றும்,
அந்நாட்டுக்கான நிதியுதவி அனைத்தும் ரத்து செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
மேலும், தென் ஆப்பிரிக்காவில் வெள்ளையின மக்கள் குறிவைத்து கொல்லப்படுவதாகவும் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.