"ரஷ்யாவின் பெருங்குடல் புற்றுநோய்க்கான தடுப்பூசி - பயன்பாட்டிற்கு தயார்"
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கையை அளிக்கும் வகையில் பெருங்குடல் புற்றுநோய்க்கான தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு வர தயாராக இருப்பதாக ரஷ்ய ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். இந்த தடுப்பூசிக்கான ஆராய்ச்சி பல ஆண்டுகளாக நீடித்த நிலையில், இந்த தடுப்பூசி புற்றுநோயின் கட்டிகளின் அளவை குறைப்பதாகவும், கட்டியின் வளர்ச்சி 60 முதல் 80% வரை குறைவது ஆராய்ச்சியில் தெரியவந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.