ஏஐ உதவியுடன் லிப் சிங்க்-இல் அசத்தும் ரோபோக்கள்...

x

ஏஐ உதவியுடன் லிப் சிங்க்-இல் அசத்தும் ரோபோக்கள்...

திரைப்படங்கள்ல நடிகர்கள் பாடலுக்கு லிப் சிங்க் பண்ணிதான பாத்துருப்போம்... இங்க ரோபோக்கள் ஏஐ உதவியோட லிப் சிங்க் பண்ணி அசத்துதுங்க...அமெரிக்காவுடைய கொலம்பியா பல்கலைக்கழகம், AI உதவியோட உதடுகள சரியா அசைச்சு பேசவும், பாடவும் கத்துக்குற ரோபோ முகத்த உருவாக்கிருக்காங்க...

முதல்ல கண்ணாடி முன்னாடி நின்னு, விதவிதமான முகபாவனைகள தானா உருவாக்கி, இந்த ரோபோக்கள் கத்துக்குதுங்க...அதுக்கப்புறம், ஆன்லைன்ல மனிதர்கள் பேசுற...பாடுற.... வீடியோக்கள பார்த்து, மனித உதடு அசையுறத புரிஞ்சுக்கிட்டும் கத்துக்குதுங்க...இப்டி நல்லா ட்ரைனிங் எடுத்து...இப்ப வேறு வேறு மொழிகள்ல பேசுறது...பாடுறதுனு... அர்த்தம் புரியலேனா கூட சரியா லிப் சிங்க் பண்ணி அசத்துதுங்க..இன்னும் சில வருடங்கள்ல, இந்த ரோபோக்கள் மனிதர்கள போலவே இயல்பா பேச ஆரம்பிச்சுருமாம்...அதுகப்றம் இதுங்க கூட நீங்க பேசுறப்ப ரோபோ கூட பேசுற ஃபீலிங்கே வராதாம்


Next Story

மேலும் செய்திகள்