Pak Car Blast | பழியை இந்தியா மீதே தூக்கிப்போடும் பாக்., - கடும் கோபத்தில் இந்தியாவின் ரிப்ளை
இந்தியாவின் டெல்லியில் கார் வெடிப்பு சம்பவம் நடந்த நிலையில், பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் (Islamabad) நகரிலும் கார் வெடிப்பு சம்பவம் நடந்திருப்பதை தொடர்பு படுத்தி இந்தியா மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டை பாகிஸ்தான் வைப்பதாக இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் பிரதமர் குற்றம்சாட்டிய நிலையில், இந்திய வெளியுறவுத்துறையின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், பாகிஸ்தானில் ராணுவத்தால் அரசியலமைப்பு சீர்குலைவு உள்ளிட்டவை காரணமாக, தனது சொந்த மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே, இந்தியாவுக்கு எதிராக தவறான கருத்துளை பாகிஸ்தாஸ் அரசு இட்டுக்கட்டுவதாக பகிரங்கமாக சாடியுள்ளார்.