Operation Sindoor | ஜெர்மன், இந்திய முப்படை தலைமை தளபதிகள் டெல்லியில் சந்திப்பு
டெல்லி வந்துள்ள ஜெர்மனியின் முப்படை தலைமைத் தளபதி கார்ஸ்டன் ப்ரூவரை CarstenBreuer இந்தியாவின் முப்படை தலைமைத் தளபதி அனில் சவுகான் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கு இடையேயான ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இருவரும் விவாதித்தனர். அதைத் தொடர்ந்து, இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்தும் இருவரும் விவாதித்தனர். இந்த சந்திப்பு மிகவும் பலனளிக்கும் வகையில் இருந்ததாக முப்படை தலைமைத் தளபதி அலுவலகத்தின் எக்ஸ் தளப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.