அமெரிக்காவை புரட்டி போட்ட இயற்கை - கொத்து கொத்தாக இறந்த மக்கள்

Update: 2025-07-06 04:27 GMT

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43-ஆக உயர்ந்துள்ளது. மத்திய டெக்சாஸ் பகுதியில் கனமழை காரணமாக குவாடலூப் Guadalupe ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது ஆற்றின் அருகே, முகாம் ஒன்றில் இருந்த சிறுமிகள் உட்பட பலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இந்நிலையில், வெள்ளத்தில் சிக்கி 15 குழந்தைகள் உட்பட 43 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே, தொடர் கனமழையால் டெக்சாஸில் உள்ள சான் கேப்ரியல் San Gabriel ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்