Israel VS Iran War | America | இஸ்ரேல்-ஈரான் போர் பதற்றம் - அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை
உலகெங்கிலும் உள்ள அமெரிக்கர்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது. இஸ்ரேல்-ஈரான் மோதல் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் நிலவும் சூழலில், அமெரிக்க குடிமக்களுக்கு உலகளாவிய எச்சரிக்கையை அந்நாட்டு வெளியுறவுத்துறை விடுத்துள்ளது. அமெரிக்கர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடத்த வாய்ப்புள்ளதாகவும், எனவே, பயண ஆலோசனை, பாதுகாப்பு எச்சரிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.