ஈரானின் எண்ணெய் வர்த்தகத்தை குறிவைத்து புதிய தடைகள் அறிவிப்பு
ஈரானின் எண்ணெய் வர்த்தகம் மற்றும் கடல் போக்குவரத்து வலையமைப்புகளை குறிவைத்து, அமெரிக்கா புதிய தடைகளை அறிவித்துள்ளது.
இதன் மூலம், ஈரானுக்கு செல்லும் வருவாய் வழிகளை முடக்குவதற்கான முயற்சிகளை டிரம்ப் நிர்வாகம் மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
அமெரிக்க நிதியமைச்சகத்தின் வெளிநாட்டு சொத்துகள் கட்டுப்பாட்டு அலுவலகம், ஈரானின் பெட்ரோலியத் துறையுடன் தொடர்புள்ளதாக குற்றம் சாட்டப்பட்ட பல கப்பல் போக்குவரத்து நிறுவனங்களையும், 9 எண்ணெய் டேங்கர் கப்பல்களையும் சேர்த்துள்ளது. இதனால், பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் அமெரிக்காவிலுள்ள சொத்துகள் முடக்கப்படுவதுடன், அமெரிக்கர்கள் அவர்களுடன் எந்தவித பரிவர்த்தனையும் மேற்கொள்ள தடை விதிக்கப்படுகிறது.
இந்த கப்பல்கள் மூலம், பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஈரானிய எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் வெளிநாட்டு சந்தைகளுக்கு கடத்தப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.