அமெரிக்கா செல்வோர் கவனத்திற்கு - வெளியான முக்கிய அறிவிப்பு
அமெரிக்காவின் கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் கடும் குளிர்கால புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், ஏர் இந்தியா நிறுவனம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. நியூயார்க் மற்றும் நியூஜெர்சியில் உள்ள நெவர்க் நகரங்களுக்கான அனைத்து ஏர் இந்தியா விமானங்களும் ஜனவரி 25 மற்றும் 26 தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் திங்கட்கிழமை வரை அமெரிக்க கிழக்கு கடற்கரை பகுதிகளில் அதீத பனிப்பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்படும் என ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.