Iran | India| ஈரானில் இந்திய இளைஞர்களுக்கு நேர்ந்த பயங்கரம் - அதிர்ச்சியில் இந்தியா
ஈரானில் கொடூரமாக தாக்கப்பட்ட ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களின் வீடியோ வெளியானதை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட இளைஞர்களை மீட்கும் பணியானது நடைபெற்று வருவதாக கர்னல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கங்கா ராம் புனியா தெரிவித்துள்ளார். இவர்களை அதிக சம்பளத்திற்கு ஸ்பெயினில் வேலை வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றிய இரண்டு ஏஜென்ட்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட இளைஞர்கள் இருவரும் கொல்கத்தாவில் இருந்து தாய்லாந்துக்கும், பிறகு அங்கிருந்து ஈரானுக்கும் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அங்கு கடத்தல்காரர்கள் அவர்களை கடத்தி அவர்களது குடும்பத்திடம் இருபது லட்சம் ரூபாய்க்கு கேட்டு மிரட்டியுள்ளனர்.