பதவி விலகிய ட்ரூடோ.. அடுத்த கனடா பிரதமர் யார் - திருப்புமுனையான மோடி மீட்டிங்..
பதவி விலகிய ட்ரூடோ.. அடுத்த கனடா பிரதமர் யார் - திருப்புமுனையான மோடி மீட்டிங்.. தீர்மானிக்கும் இடத்தில் இந்தியா..?
- கனடா பிரதமருக்கான ரேசில் குதித்திருக்கும் இந்தியர் சந்திரா ஆர்யா குறித்த ஒரு தொகுப்பு உங்கள் பார்வைக்கு..
- இந்தியாவுக்கு எதிரான செயல்பாடு, பொருளாதார நெருக்கடியால் சொந்த கட்சியிலேயே எதிர்ப்பு எழ, பிரதமர் பதவியை விட்டு விலகுவதாக அறிவித்தார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.
- கட்சி புதிய பிரதமரை தேர்வு செய்யும் வரையில், பதவியில் இருப்பேன் என்றும் அறிவித்தார்.
- இதனையடுத்து லிபரல் கட்சி, புதிய பிரதமரை தேர்வு செய்யும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளது.
- முன்னாள் துணை பிரதமர் கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட், கனடா வங்கியின் முன்னாள் ஆளுநர் மார்க் கார்னி பிரதமருக்கான போட்டியில் களம் இறங்கியுள்ளனர்.
- இந்த ரேசில் இருந்து இந்திய வம்சாவளியை சேர்ந்த தமிழ்பெண் அனிதா ஆனந்த் விலகிவிட்டார்.
- இந்த சூழலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சந்திரா ஆர்யா, பிரதமர் பதவிக்கான ரேசில் களம் இறங்கியுள்ளார்.