இனி இதன் பெயர் "பர்கர்" கிடையாது - புதிய மசோதா
ஐரோப்பாவில் நிறைவேற்றப்பட்ட புதிய மசோதாவுக்கு சைவ உணவு உற்பத்தியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஐரோப்பாவில் மாமிச உணவு பெயர்களை பயன்படுத்தி சைவ உணவு பொருட்களை தயாரிப்பதற்கு எதிராக மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. பர்கர், சாய்சேக், வெஜ் மீட் உள்ளிட்ட சைவ உணவுகள் மாமிச பெயரில் இருப்பதால், மாமிச உணவு பொருட்களின் வர்த்தகம் பாதிக்கப்பட்டு வந்தது. இதை கருத்தில் கொண்டு ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் புதிய மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு சைவ உணவு உற்பத்தியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.