Fireaccident | ஷாப்பிங் மாலில் நடந்த பயங்கரம்.. 60 பேர் உடல் கருகி துடிதுடித்து பலி

Update: 2026-01-22 08:27 GMT

பாகிஸ்தான் ஷாப்பிங் மாலில் பயங்கர தீ விபத்து - 60 பேர் பலி

பாகிஸ்தானின் முக்கிய நகரமான கராச்சியில் அமைந்துள்ள ஷாப்பிங் மாலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த கோர விபத்தில் உயிரிழந்த 30 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், கட்டடத்தின் சில பகுதிகளில் உள்ள கடுமையான புகை மற்றும் வெப்பத்தால், மீட்புபணி வீரர்கள் அங்கு சென்றடைவதில் சிக்கல் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் ஜேசிபி உதவியுடன் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்