America Mayor Election |டிரம்ப்பை அலறவிட்ட 3 இந்திய வம்சாவளி இஸ்லாமியர்கள் - உற்றுபார்த்த அமெரிக்கா
அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே அவருக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மூன்று இஸ்லாமியர்கள் முதல் அரசியல் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளனர். வர்ஜீனியாவின் முதல் இந்திய-அமெரிக்க, இஸ்லாமிய ஆளுநராக கசாலா ஹாஷ்மியும், அமெரிக்காவின் மிகப்பெரிய நகரமான நியூயார்க் நகர மேயர் தேர்தலில் சோஹ்ரான் மம்தானியும், இரண்டாவது முறையாக சின்சினாட்டி மேயராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஃப்தாப் புரேவல்யும் வெற்றி பெற்றிருப்பது அதிபரின் குடியரசு கட்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், வெற்றி பெற்ற ஜனநாயக கட்சி வேட்பாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா, எதிர்காலம் கொஞ்சம் பிரகாசமாக தெரிவதாக தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.