ஒன்று கூடிய அமெரிக்கா, ஈரான் - மொத்த உலகின் கண்களும் இப்போ ரோம் பக்கம்

Update: 2025-04-20 07:32 GMT

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா, ஈரான் இடையேயான இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தை, இத்தாலியின் தலைநகர் ரோமில் நடந்து முடிந்துள்ளது. முதல் கட்ட பேச்சு வார்த்தை ஓமன் நாட்டில் நடைபெற்று முடிந்த நிலையில், இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தை ரோமில் நடைபெற்றது. அமெரிக் தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி ஆகியோருக்கிடையே, இந்த பேச்சு வார்த்தை நடைபெற்றது. பல கட்ட பேச்சு வார்த்தைக்கு பின்னர், இரு நாடுகளுக்கும் இடையே அணு சக்தி ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்