Turkey | Plane Crash | விமான விபத்தில் ராணுவ தளபதி பலி.. துருக்கியில் பரபரப்பு..
துருக்கி விமான விபத்தில் லிபிய ராணுவ தளபதி உயிரிழப்பு
துருக்கியில் நிகழ்ந்த விமான விபத்தில் லிபியா ராணுவத் தளபதி முகம்மது அலி மற்றும் 4 பேர் உயிரிழந்தனர். விமானத்தின் சிதைந்த பாகங்கள் அங்காராவில் உள்ள வயல் பகுதியில் கண்டெடுக்கப்பட்டன. துருக்கியில் உயர்மட்ட பாதுகாப்பு குழு கூட்டத்தில் பங்கேற்று திரும்பும்போது விபத்து ஏற்பட்டுள்ளது. எசன்போகா Esenboga விமான நிலையத்திலிருந்து திரிபோலிக்கு புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, விமானத்துடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.