இந்தியா உடனான 7 ஒப்பந்தங்களை நிறுத்தும் அமெரிக்கா

Update: 2025-08-22 07:33 GMT

ஆகஸ்ட் 15-ல் அமெரிக்காவின் USAID இந்தியாவில் தனது நடவடிக்கைகளை நிறுத்தியது

இந்தியாவில் வாக்காளர் எண்ணிக்கையை அதிகரிக்க அமெரிக்கா 21 மில்லியன் டாலர் செலவிடவில்லை என அமெரிக்க தூதரகமே தெரிவித்து உள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் யு.எஸ்.ஏ.ஐ.டி. (USAID) நிறுவனம் பற்றி கேரளா மாநிலங்களவை உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் மத்திய அரசிடம் கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு ஆகஸ்ட் 15-ம் தேதி யு.எஸ்.ஏ.ஐ.டி (USAID) இந்தியாவில் தனது நடவடிக்கைகளை நிறுத்திவிட்டதாக மத்திய அரசு பதில் அளித்துள்ளது.

"2014 - 2024 வரை இந்தியாவில் வாக்காளர் எண்ணிக்கையை அதிகரிக்க, 21 மில்லியன் டாலர் நிதியை அமெரிக்கா வழங்கவில்லை" என அமெரிக்க தூதரகம் கூறியதாக மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

ஜூலை 29, 2025 யு.எஸ்.ஏ.ஐ.டி., (USAID) இந்தியாவில் அனைத்து செயல்பாடுகளையும், ஆகஸ்ட் 15, 2025-க்குள் முடிக்க அமெரிக்க தூதரகம் திட்டமிட்டு இருந்தாகவும்...

"ஆகஸ்ட் 11, 2025 டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம், பொருளாதார விவகாரத்துறைக்கு இது தொடர்பாக கடிதம்" எழுதியதாகவும்..

அக்கடிதத்தில், "இந்திய அரசுடனான 7 கூட்டு ஒப்பந்தங்களும் ஆகஸ்ட் 15-ம் தேதி நிறுத்தப்படும் என அமெரிக்கா தெரிவித்து இருந்ததாக" மத்திய அரசு விளக்கி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்