Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (15.08.2025) | 6 AM Headlines | ThanthiTV

Update: 2025-08-15 00:34 GMT

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் ஈடுபட்ட 9 விமானப்படை அதிகாரிகளுக்கு வீர் சக்ரா விருது அறிவிப்பு...

சுதந்திர தினத்தையொட்டி 4 அதிகாரிகளுக்கு சர்வோதம் யுத்த சேவா பதக்கத்தை அறிவித்தது மத்திய அரசு...


சுதந்திர தின விழாவையொட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு...

ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு....


சுதந்திர தினத்தன்று ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தமிழக வெற்றிக் கழகம் அறிவிப்பு...

ஏற்கனவே தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது, காங்கிரஸ், வி.சி.க, கம்யூனிஸ்ட் கட்சிகள்...


தொடர் விடுமுறை எதிரொலியாக ஆம்னி பேருந்துகளில் கட்டணம் உயர்வு...

சென்னையில் இருந்து மதுரை, சேலம், நெல்லை செல்லும் ஆம்னி பேருந்துகளில் 3 மடங்கு கட்டண உயர்வு என பயணிகள் குற்றச்சாட்டு...


சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை சந்தித்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான்....

தூய்மைப் பணியாளர்களின் பணி நிரந்தர வாக்குறுதியை நிறைவேற்றாமல் புதிய வாக்குறுதிகள் எதற்கு என்று கேள்வி....


நவம்பர் 1, 2ம் தேதி நடைபெற இருந்த ஆசிரியர் தகுதித் தேர்வுகள் நவம்பர் 15 ,16ம் தேதிக்கு மாற்றம்....

கல்லறை திருநாள் அன்று போட்டித் தேர்வு நடத்தக் கூடாது என எதிர்ப்பு எழுந்த நிலையில், தேதிகளை மாற்றியது ஆசிரியர் தேர்வு வாரியம்.....

Tags:    

மேலும் செய்திகள்