Today Headlines | இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (24.07.2025) | 11 PM Headlines | ThanthiTV
மருத்துவமனையில் உள்ள முதல்வர் ஸ்டாலின் உடல்நலம் பெற த.வெ.க. தலைவர் விஜய் வாழ்த்து...
பூரண உடல்நலம் பெற்று மக்களுக்கு கடமையாற்றிட வாழ்த்துவதாக எக்ஸ் தளத்தில் பதிவு...
கோவை மாவட்டம் அன்னூர் அருகே காவலர் போல் நடித்து, மளிகைக் கடைக்குள் புகுந்து 40 ஆயிரம் ரூபாயை திருடிய நபர் கைது...
குட்கா பொருள் இருக்கிறதா என சோதனை செய்வது போல் நாடகமாடி கைவரிசை காட்டியது அம்பலம்...
சின்னத்திரை நடிகை ரெகானா பேகம் அளித்த புகார் தொடர்பாக இரு தரப்பினரிடமும் பூந்தமல்லி போலீசார் விசாரணை.....
நீதிமன்றத்தை நாடி தீர்வு காண போவதாக கண்ணீர் மல்க பேட்டி.....
கம்போடியா மீது F-16 போர் விமானங்கள் மூலம், 8 இடங்களில் குண்டுகளை வீசி தாய்லாந்து ராணுவம் தாக்கியது...
தாய்லாந்தின் தாக்குதலுக்கு தங்களது வீரர்கள் பதிலடிதான் கொடுத்ததாக கம்போடிய ராணுவம் விளக்கம்....
ரஷ்யாவில் மாயமான பயணிகள் விமானம், கிழக்கு அமூர் பகுதியில் விழுந்து விபத்து...
விமானத்தில் பயணித்த 48 பேரும் உயிரிழந்த நிலையில், மௌன அஞ்சலி செலுத்தி இரங்கல் தெரிவித்தார் ரஷ்ய அதிபர் புதின்...