Today Headlines | இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (29.06.2025) | 11 PM Headlines | ThanthiTV

Update: 2025-06-29 17:52 GMT

அவசர நிலையை அமல்படுத்தியவர்கள், அரசியலமைப்பை மட்டுமின்றி, நீதித்துறையையும் அடிமையாக வைத்திருக்க முயன்றனர்...

மனதின் குரல் நிகழ்ச்சியில், பிரதமர் மோடி குற்றச்சாட்டு...


பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்காக கையகப்படுத்த திட்டமிட்டுள்ள நிலங்களுக்கு விலை நிர்ணயம்...

3 ஆயிரத்து 331.25 ஏக்கர் பரப்பிலான நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.35 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.2.57 கோடி வரை விலை நிர்ணயம் செய்து அரசாணை...


பாமகவில் உட்கட்சிப் பிரச்சினை தீவிரம் அடையும் நிலையில், அன்புமணி ராமதாஸ் திடீர் டெல்லி பயணம்...

தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்திக்க உள்ளதாக தகவல்...


சிவகங்கை மாவட்டம், திருபுவனம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த விவகாரம்...

காவல்நிலையத்தில் பணிபுரிந்த குற்றப்பிரிவு தனிப்படை காவலர்கள் 6 பேர் பணியிடை நீக்கம்...


கர்நாடகாவில் பெய்துவரும் கனமழையால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தொடரும் வெள்ளப்பெருக்கு...

அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் 5வது நாளாக தடை...


டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில், நெல்லை அணியை 69 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி திருப்பூர் வெற்றி...

183 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய நெல்லை அணி, 19.4 ஓவரில், 113 ரன்களுக்கு ஆல் அவுட்..

Tags:    

மேலும் செய்திகள்