TodayHeadlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (26.09.2025) | 1 PM Headlines | ThanthiTV

Update: 2025-09-26 08:03 GMT
  • நுங்கம்பாக்கம், சென்னைஜெய்சங்கர் சாலை - பெயர் பலகையை திறந்து வைத்தார் முதல்வர்சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரி பாதைக்கு 'ஜெய்சங்கர் சாலை' என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
  • விஜய் சுற்றுப்பயணம் - கரூரில் அனுமதிகரூரில் தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்த்தும் இடத்திற்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளனர்.தவெக சார்பில் அனுமதி வேண்டி கோரிக்கை வைத்த நிலையில், வேலுச்சாமிபுரம் பகுதியில் மக்கள் சந்திப்பு நடத்த விஜய்க்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  • தவெக கொடி விவகாரம் - விஜய் பதிலளிக்க உத்தரவுதவெக கொடிக்கு தடை விதிக்க மறுத்த தனிநீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக் கோரிய மேல்முறையீட்டு மனுவுக்கு
  • தவெக தலைவர் விஜய் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.விஜய் பிரசார பாணி - சீமான் விமர்சனம்...
  • தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் பிரசாரம் குறித்து நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் விமர்சனம்...பிரசாரம் மூலம் மக்களின் பிரச்சினைகளை ஆட்சியாளர்கள் கவனத்திற்கு விஜய் எடுத்து செல்லவில்லை எனக் குற்றம்சாட்டினார்...தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபையின் நிறுவனத் தலைவர் பச்சையப்பன் தொடர்ந்த வழக்கில் விஜய் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணை 6 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்