Today Headlines | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (07.07.2025) | 9 PM Headlines | ThanthiTV

Update: 2025-07-07 16:12 GMT

16 ஆண்டுகளுக்கு பிறகு வெகு விமர்சையாக நடைபெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகம்...

லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்...


திருத்தி அமைக்கப்பட்ட 44 தொழிலாளர் நலச் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 9ஆம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தம்...

தமிழகத்தில் தொமுச, சிஐடியு உள்ளிட்ட 13 தொழிற்சங்கங்கள் பங்கேற்கும் என அறிவிப்பு...


அரசு துறைகளின் சார்பில் நடைபெற்று வரும் பணிகள் அனைத்தையும் உரிய காலத்திற்குள் முடிக்க வேண்டும்...

தலைமை செயலகத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில்,உயர் அலுவலர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல்...


தமிழகத்தில் நடைபெற்று வரும் திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஈபிஎஸ் பேச்சு...

அதிமுக பாஜக கூட்டணி இமாலய வெற்றி பெறும் என்றும் நம்பிக்கை...

Tags:    

மேலும் செய்திகள்