Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (05-09-2025) | 7PM Headlines | Thanthi TV

Update: 2025-09-05 14:21 GMT

தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு...

புதுக்கோட்டை, கடலூர், அரியலூர் மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்....


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்துள்ளது...

ஒரு சவரன் தங்கம் 78 ஆயிரத்து 920 ரூபாய்க்கு விற்பனையாகிறது...


முதலமைச்சர் ஸ்டாலினின் வெளிநாட்டு பயணம் மூலம் 13 ஆயிரத்து 16 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது...

ஜெர்மனி, இங்கிலாந்து பயணத்தில் ஈர்க்கப்பட்டுள்ள முதலீடுகள் குறித்து தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது...


அ.தி.மு.க-வில் இருந்து பிரிந்து சென்றவர்களை பத்து நாட்களுக்குள் ஒன்றிணைக்க எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கெடு விதித்துள்ளார்...

2026 சட்டமன்ற தேர்தலுக்கு குறைந்த நாட்களே இருப்பதால் அ.தி.மு.க தலைமை விரைந்து முடிவு எடுக்க வலியுறுத்தினார்...


அ.தி.மு.கவை ஒருங்கிணைக்க யார் முயற்சி செய்தாலும் ஆதரவு தெரிவிப்பேன்...

செங்கோட்டையனுக்கு பக்கபலமாக இருப்பேன் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி அளித்தார்...

Tags:    

மேலும் செய்திகள்