Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (07.12.2025) | 7 PM Headlines | ThanthiTV
விமானங்கள் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் பயணிகளுக்கு 610 கோடி ரூபாய் டிக்கெட் கட்டணத்தை இண்டிகோ நிறுவனம் திருப்பி அளித்துள்ளது...விமான நிலையங்களில் சிக்கிய மூவாயிரம் லக்கேஜுகள் திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது...
நாடு முழுவதும் விமான சேவை 95 விழுக்காடு சீரடைந்துள்ளதாக இண்டிகோ நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது...வரும் புதன்கிழமைக்குள் முழுமையாக இயல்பு நிலை திரும்பும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது...
கும்பகோணத்தில் பட்டீஸ்வரத்தில் 12ஆம் வகுப்பு மாணவன், சக மாணவர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம்...கைதான 15 மாணவர்கள் மீது அடிதடி, கொலை உள்ளிட்ட 5 பிரிவின் கீழ் வழக்கு பதியப்பட்ட நிலையில், கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது....
வால்பாறையில் மனித - வனவிலங்கு மோதலை தவிர்க்க தலைமை வனக்காப்பாளரின் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது...வால்பாறை தேயிலை எஸ்டேட் பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் குழு அமைக்கப்பட்டுள்ளது...
தமிழகத்தில் 6.40 கோடி SIR படிவங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது....இதுவரை 99 சதவீத படிவங்கள் டிஜிட்டல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது...
பிலிப்பைன்ஸ் நாட்டில் நடந்த சாலை விபத்தில் கடலூரை சேர்ந்த மருத்துவ மாணவர் நாராயணன் என்பவர் உயிரிழந்தார்...பைக்கில் சென்ற போது ஏற்பட்ட விபத்தில் பலியான நிலையில், மாணவனின் உடலை மீட்க தமிழக அரசுக்கு, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்...
பிலிப்பைன்ஸ் நாட்டில் நடந்த சாலை விபத்தில் கடலூரை சேர்ந்த மருத்துவ மாணவர் நாராயணன் என்பவர் உயிரிழந்தார்...பைக்கில் சென்ற போது ஏற்பட்ட விபத்தில் பலியான நிலையில், மாணவனின் உடலை மீட்க தமிழக அரசுக்கு, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்...
தமிழ்நாட்டில் என்றும் சமத்துவ தீபம் எரியும், வளர்ச்சியின் ஒளி பெருகும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்...AIIMS வராது, MetroRail தராது, கீழடி ஆய்வறிக்கையை மறைப்பதுதான் பாஜக பேசும் அரசியல் என்றும் சாடியுள்ளார்....
திருப்பரங்குன்றத்தில் வழக்கமான இடத்தில் தீபம் ஏற்றப்பட்ட நிலையில், சிலர் அரசியல் லாபத்திற்காக பிளவுகளை உண்டாக்குவதாக முதல்வர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்... வன்முறையை தூண்ட நினைப்பவர்களை, மதுரை மக்கள் அடித்து விரட்டுவார்கள் என்றும், அமைதியை நிலைநாட்டிய மக்களுக்கு எனது பாராட்டுக்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்...
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற தமிழக அரசு அனுமதிக்கவில்லை எனக்கூறி சென்னை கோயம்பேட்டில் இந்து முன்னணி அமைப்பினர் போராட்டம் நடத்தினர்... சாலை மறியலில் ஈடுபட முயன்றவர்களை குண்டுக்கட்டாக போலீசார் கைது செய்ததால் பரபரப்பான சூழல் நிலவியது...
திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தை கண்டித்து நெல்லை, சங்கரன்கோவில், கோவை, கடலூர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்...முருக பக்தர்கள் அவமதிக்கப்பட்டதாக கூறி போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை போலீசார் கைது செய்ததால் தள்ளு முள்ளு ஏற்பட்டது...