Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (29.12.2025) | 6 PM Headlines | ThanthiTV

Update: 2025-12-29 13:07 GMT
  • தமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தரை நியமிக்கவும், நீக்கவும் அரசுக்கு அதிகாரம் அளிக்கும் சட்ட மசோதா...3 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த மசோதாவை, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு திருப்பி அனுப்பினார்...
  • தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பிறகு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இதுவரை 7 லட்சத்து 28 ஆயிரம் பேர் விண்ணப்ப்பித்துள்ளனர்...நேற்று ஒரே நாளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 2.8 லட்சம் பேர் விண்ணப்பம் செய்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது... 
  • திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் திமுகவின் மகளிர் அணியின் "வெல்லும் தமிழ் பெண்கள்' மாநாடு தொடங்கியது...இசை நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வரும் மாநாட்டில், முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்புரையாற்ற உள்ளார்...
  • திருப்பூர் மாவட்டம், காரணம்பேட்டையில் நடைபெறும் திமுகவின் மகளிர் அணி மாநாட்டிற்கு வருகை தந்த முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது...
  • திருவள்ளூரில் வடமாநில இளைஞரை 4 சிறார்கள் அரிவாளால் தாக்கிய சம்பவத்தின் காணொலி காண நெஞ்சம் பதைக்கிறது என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்...கைது செய்யப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்...
  • தங்கம் விலை சவரனுக்கு 640 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் 1 லட்சத்து 4 ஆயிரத்து 160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.ஒரு கிராம் தங்கம் 13 ஆயிரத்து 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
  • சேலம் பாமக பொதுக்குழு கூட்டத்தில் கண்ணீர் மல்க பேசிய ராமதாஸ், தன்னை அவமதிப்பதற்கு பதிலாக வெட்டி வீசி இருக்கலாம் என கூறினார்...பாமகவில் 95 சதவிகிதம் பேர் தன் பக்கமே இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்
  • ராமதாஸ்-அன்புமணி இடையே மோதல் போக்கு தொடரும் நிலையில் பசுமை தாயகம் தலைவர் பதவியில் இருந்து அன்புமணியின் மனைவி சவுமியா நீக்கம்...சேலத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்...
  • ராமதாஸ் தரப்பு இன்று எடுத்த முடிவுகள் பாமகவை கட்டுப்படுத்தாது என, பாமக வழக்கறிஞர் பாலு தெரிவித்துள்ளார்..பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம் அன்புமணிக்கு தான் உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்...
  • புதுச்சேரி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற குடியரசு துணை தலைவர் சி.பி.ராதகிருஷ்ணன், மாணவர்களுக்கு பட்டம் அளித்தார்...நிகழ்ச்சியில் பேசிய அவர், போதை பழக்கத்தில் இருந்து மாணவர்கள் விலகி இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்...
  • உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில், பாஜக முன்னாள் எம்.எல்.ஏ குல்தீப் செங்கருக்கு வழங்கப்பட்ட ஜாமின் ரத்து...ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்த டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவையும் ரத்து செய்து உச்சநீதிமன்றம் அதிரடி...
Tags:    

மேலும் செய்திகள்