கடலூரில், கார் சன் ரூப் மீது நின்று மதுபோதையில் அட்டகாசம் செய்த இளைஞர், போலீஸ் விசாரணைக்குப்பின் மன்னிப்பு கேட்டுள்ளார்.
விழுப்புரம் வில்லியனூர் பகுதியை சேர்ந்த வசந்த் மற்றும் கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த சத்தியமூர்த்தி ஆகிய இருவரும், புதுச்சேரியில் மது அருந்தியுள்ளனர். இதனையடுத்து இருவரும் கடலூர் சாவடி வழியாக காரில் சென்றுள்ளனர். அப்போது, கார் சன் ரூப் டாப் மீது சட்டை அணியாமல் நின்றபடியே வசந்த் மது அருந்தியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவியது.