Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (25.01.2026) | 6 AM Headlines | Thanthi TV

Update: 2026-01-25 01:09 GMT
  • கடந்த 20ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கிய தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது........அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பகுதிநேர ஆசிரியர்களுக்கு சிறப்பு மதிப்பெண்கள், உள்ளிட்ட அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிட்டார்...
  • சட்டமன்ற தேர்தல் முடிந்து மீண்டும் அமையவுள்ள திமுக ஆட்சி, தற்போதைய சாதனைகளை மிஞ்சும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்...ஐந்து ஆண்டு கால ஆட்சியில் மகிழ்ச்சியாக உள்ளதாகவும், இலக்கை வென்று விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்...
  • சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி 5வது நாளாக நேர்காணல் நடத்தினார்....விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தூத்துக்குடி, தென்காசி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்கள் நேர்காணலில் பங்கேற்றனர்...
  • மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில், தவெக தலைவர் விஜய் தலைமையில் அக்கட்சியின் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.....சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக கட்சித் தலைமை அறிவித்துள்ளது...
  • இந்தி திணிப்பை எதிர்த்து உயிர்த்தியாகம் செய்தவர்களை போற்றும் வகையில் தமிழகம் முழுவதும் இன்று மொழிப்போர் தியாகிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.....காஞ்சிபுரத்தில் திமுக சார்பில் நடைபெறும் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்...
Tags:    

மேலும் செய்திகள்