ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை
இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றுக - ராமதாஸ். இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டுமென பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சம்பள முரண்பாடு காரணமாக கடந்த 25 நாட்களாக ஆசிரியர்கள் நடத்தி வரும் போராட்டத்தால், அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நிதிநிலை சரியானதும் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்ற அரசின் வாக்குறுதி ஏற்கத்தக்கது இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். பேச்சுவார்த்தையின் மூலம் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கையை பரிசீலிக்க வேண்டுமென தமிழக அரசுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.