Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (14.12.2025) | 6 PM Headlines | ThanthiTV
உலகப் புகழ்பெற்ற ஆஸ்திரேலியாவின் போண்டி பீச்சில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.. காவல் அதிகாரிகள் இரண்டு பேர் உட்பட 29 பேர் காயமடைந்துள்ளனர்...
ஆஸ்திரேலியாவின் போண்டி கடற்கரையில் துப்பாக்கிச்சூடு நடத்திய பயங்கரவாதியை தனி ஒரு நபராக போராடி தடுத்து துப்பாக்கியை பிடுங்கிய வீடியோ வைரலாகி உள்ளது....பல பேரின் உயிரை பாதுகாத்த இளைஞரை சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்....
ஆஸ்திரேலியாவின் போண்டி கடற்கரையில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதியை போலீஸார் சுற்றிவளைத்து பிடித்த காட்சிகள் வெளியானது...
ஆஸ்திரேலியாவின் போண்டி கடற்கரையில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்....
உண்மையின் பக்கம் நின்று மோடி அரசை அகற்றுவோம் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சூளுரைத்துள்ளார்....
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக பீகார் அமைச்சர் நிதின் நபின் நியமிக்கப்பட்டுள்ளார்....
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நிறைவுபெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது....
பாலியல் வன்கொடுமை வழக்கில் மலையாள நடிகர் திலீப் விடுதலை செய்யப்பட்ட தீர்ப்பு ஆச்சர்யமளிக்கவில்லை என்று பாதிக்கப்பட்ட நடிகை ஆதங்கம் தெரிவித்துள்ளார்....
மும்பை வான்கடே மைதானத்தில் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்...
ஈரோட்டில் வரும் 18-ஆம் தேதி நடைபெறவுள்ள தவெக தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு போலீஸார் அனுமதி அளித்துள்ளனர்....