மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (30-08-2025) Thanthi TV

Update: 2025-08-30 08:00 GMT

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், செப்டம்பர் மாதம் சுற்றுப்யணத்தை தொடங்குகிறார்.... விஜய் சுற்றுப்பயணம் குறித்து பனையூரில் 10 மாவட்ட நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை

திருவள்ளூர் மாவட்டம் அருங்குளத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மரங்களின் மாநாடு நடத்துகிறார்.... நா.த.க., சார்பில் நடத்தப்பட்ட ஆடு, மாடுகள் மாநாடு, மக்களிடையே பேசு பொருளான நிலையில் மரங்களோடு நடத்தப்படும் மாநாடு...

ஜப்பானில் புல்லட் ரயில் இயக்க பயிற்சி பெற்று வரும் இந்திய ரயில் ஓட்டுநர்களை பிரதமர் மோடி சந்தித்தார்... ஜப்பான் நாட்டின் 16 மாகாண ஆளுநர்களை சந்தித்து இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை...

தியான்ஜினில் நாளை தொடங்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி சீனா புறப்பட்டார்.... 7 ஆண்டுகளுக்கு பின் முதல்முறையாக சீனா செல்லும் பிரதமர், ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதினை சந்திக்க உள்ளார்...

பீகாரில் 14வது நாளாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி யாத்திரை... வாக்காளர் அதிகார யாத்திரையில் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்...


ஓய்வுபெறும் நாளில் அரசு ஊழியர்களை சஸ்பெண்ட் செய்யக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது... முதல்வரின் அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது...

ராமநாதபுரத்தில் விநாயகர் சிலை வைத்துக் கொண்டு டிராக்டரில் வீலிங் செய்த நபர்கள்.... சமூக வலைதளங்களில் வீடியோ பரவிய நிலையில் இளைஞர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்...

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே பைக் மீது மோதிய தனியார் பேருந்து மோதிய பரபரப்பு காட்சிகள் வெளியானது... விபத்தில் படுகாயம் அடைந்த இளைஞர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்....

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே தனியார் ஆலை ஊழியர் உருட்டுக்கட்டையால் தாக்கப்படும் பரபரப்பு காட்சிகள் வெளியானது... கடனை திருப்பி தராததால் கூலிப்படை வைத்து ஊழியர் மீது தாக்குதல் நடத்திய நபரை தேடும் காவல்துறை...

நெல்லை பேட்டையில் மெக்கானிக் செட் உரிமையாளர், விரட்டி விரட்டி வெட்டப்படும் அதிர்ச்சி காட்சி வெளியானது... கொடுக்கல் வாங்கல் பிரச்சினையால் கொலை முயற்சி? என போலீசார் விசாரணை நடத்துகின்றனர்...

Tags:    

மேலும் செய்திகள்