Today Headlines | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (02.01.2026) | 11 AM Headlines | Thanthi TV

Update: 2026-01-02 05:54 GMT
  • ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 1,120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 640 ரூபாய்க்கு விற்பனையாகிறது...ஒரு கிராம் ஆபரண தங்கம் 12 ஆயிரத்து 580 ரூபாய்க்கு விற்பனையாகிறது... வெள்ளி விலை கிலோவுக்கு 4 ஆயிரம் ரூபாய் உயர்ந்து 2 லட்சத்து 60 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது...ஒரு கிராம் வெள்ளி 260 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது....
  • தென்மேற்கு வங்க கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வரும் செவ்வாய்கிழமை அன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது...குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் அடுத்த வாரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது....
  • தமிழகம் முழுவதும் 75 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்களில் நாளை மற்றும் நாளை மறுநாள் வாக்காளர்களுக்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது...வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க,  திருத்தம் செய்ய ‌ சிறப்பு முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது...
  • ஜனவரி ஆறாம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ள ஜாக்டோ ஜியோ அமைப்பினருடன், அமைச்சர்கள் குழு ஆலோசனை...சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து விவாதிக்கப்பட்டுவருவதாக தகவல் வெளியாகி உள்ளது...
  • நீலகிரி குன்னூரில் விடிய விடிய கொட்டித் தீர்த்த னமழையால் உழவர் சந்தை பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது...கடந்த 24 மணி நேரத்தில் குன்னூரில் 21.5 செமீ. மழை பெய்த நிலையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது...

Tags:    

மேலும் செய்திகள்