Today Headlines | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (24.12.2025) | 11 AM Headlines | ThanthiTV

Update: 2025-12-24 06:36 GMT

அரசு போக்குவரத்து கழகம் சார்பில் வால்வோ சொகுசு பேருந்து சேவையை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்... 34 கோடி ரூபாய் செலவில் 20 சொகுசு பேருந்துகளின் சேவை தொடங்கி உள்ளது....

தகவல் தொடர்பு சேவைக்காக உருவாக்கப்பட்ட அமெரிக்காவின் ப்ளூ பேர்ட் (blue bird) செயற்கைக்கோளை இஸ்ரோ இன்று விண்ணில் செலுத்தியது... ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து செலுத்தப்பட்ட செயற்கைக்கோள், எல்.வி.எம்-3 ராக்கெட் வாயிலாக வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது..

அமெரிக்க செயற்கைகோளுடன் LVM3 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு பிரதமர் மோடி வாழ்த்து கூறியுள்ளார்...  விண்வெளியில் இந்தியா தொடர்ந்து உயரப் பறக்கிறது என, பிரதமர் பெருமிதம் தெரிவித்துள்ளார்... LVM3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டதற்காக விஞ்ஞானிகளை இஸ்ரோ தலைவர் நாராயணன் பாராட்டினார்... வணிக ரீதியான 34 நாடுகளை சேர்ந்த 434 செயற்கைக்கோள்களை, இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்...

வெள்ளி விலை ஒரே நாளில் கிலோவிற்கு 10 ஆயிரம் ரூபாய் உயர்ந்துள்ளது... ஒரு கிலோ வெள்ளி 2 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது...

வைகுண்ட ஏகாதசியின் 5ஆம் நாள் திருவிழாவில் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி சிவப்பு நிற பட்டு அணிந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். ரங்கா ரங்கா என பரவசத்துடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்...

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி, ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்... 700க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், பத்து கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது...

சென்னை விமான நிலையத்தில் குழந்தைக்கு ஆதார் கார்டு இல்லை என்பதால் விமானத்தில் பயணிக்க அனுமதி மறுப்பு... மத்திய தொழில் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் விமானத்தை தவறவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது...

முதலமைச்சர் ஸ்டாலினின்  புதிய டிஜிட்டல் தொடரான ​​"வைப் வித் எம்.கே.எஸ்" (vibe with MKS) இன்று மாலை வெளியாகவுள்ளது...தமிழ்நாடு முழுவதும் உள்ள இளைஞர்களுடன் முதலமைச்சர் கலந்துரையாட உள்ளார்...

தந்தி டிவியின் ஸ்பெஷல் ரிப்போர்ட்டில் செய்தி வெளியானதன் எதிரொலி ... கிளாம்பாக்கம் - மகேந்திரா சிட்டி இடையே ஈரடுக்கு பாலம் அமைக்க தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது...



Tags:    

மேலும் செய்திகள்