Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (08.12.2025) | 1 PM Headlines | ThanthiTV
கேரளாவில் நடிகைக்கு பாலியல் துன்புறுத்தல் அளிக்கப்பட்ட வழக்கில் நடிகர் திலீப் நிரபராதி என, எர்ணாகுளம் முதன்மை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது... நடிகர் திலீப் உட்பட 4 பேர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், மற்ற 6 பேர் குற்றவாளிகள் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது...
நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்... குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதற்கான விசாரணை வரும் 12 ஆம் தேதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது...
சென்னை விமான நிலையத்தில் 7வது நாளாக 71 இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன... 38 விமானங்களின் புறப்பாடு, 33 விமானங்களின் வருகை இன்று ரத்து செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது...
நாடு முழுவதும் 7வது நாளாக இண்டிகோ விமான சேவை பாதிக்கப்பட்டுள்ள விவகாரம்... விமானங்கள் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக முறையிடப்பட்ட நிலையில், அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது...
மக்களவையில் நடைபெற்ற வந்தே மாதரம் பாடல் குறித்த சிறப்பு விவாதத்தில், பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார்... வந்தே மாதரம் என்கிற மந்திரம் நாட்டின் விடுதலை இயக்கத்திற்கு புதிய தாக்கத்தையும், உத்வேகத்தையும் வழங்கியது என அவர் தெரிவித்தார்...
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது...காணொலி காட்சி வாயிலாக மாவட்ட செயலாளர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார்...
அதிமுக பொதுச்செயலாளராக ஈபிஎஸ் தேர்வானது சட்டவிரோதம் என அறிவிக்க கோரிய மனு... சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, திண்டுக்கல்லை சேர்ந்த சூர்யமூர்த்தி என்பவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்...
புதுச்சேரி பொதுக்கூட்டத்தில் காவல்துறையின் நிபந்தனைகளை பின்பற்ற, தொண்டர்களுக்கு தவெக தலைமை அறிவுறுத்தியுள்ளது... விஜயின் வாகனத்தை தொண்டர்கள் பின்தொடரக்கூடாது எனவும், கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கு அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது...
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சங்கர் கணேஷ் என்பவரின் மனைவி சிபிஐ விசாரணைக்கு ஆஜர் ஆகியுள்ளார்... தவெக சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்ட 5 நிர்வாகிகளும் கரூர் சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராகியுள்ளனர்...
கர்நாடகாவின் வருணா தொகுதியில் முதல்வர் சித்தராமையா வெற்றிபெற்றதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு... 5 வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றிவிட்டதாக தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்க சித்தராமையாவுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது...
சென்னை மாங்காடு அருகே வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுமி தடுக்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது...