Hyderabad | ஹைதராபாதில் பட்டப்பகலில் நடுரோட்டில் ஒருவரை வெட்டி கொன்ற கும்பல் - பதறவைக்கும் CCTV
ஹைதராபாதில் பட்டப்பகலில் நடுரோட்டில் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட பதறவைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. ஹைதராபாத் ஜவஹர் நகரில் 50 வயதான வெங்கட ரத்னம் என்ற நபரை ஆட்டோவில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நடுரோட்டில் வெட்டி கொலை செய்து விட்டு தப்பியோடியுள்ளனர். இந்த கொலை சம்பவத்தின் முழு காட்சிகளும் அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவியில் தெளிவாக பதிவாகி உள்ளது. ஹைதராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.