ஆட்டுக்குட்டியை துரத்திச் சென்று கடித்த 3 தெரு நாய்கள்
கரூர் மாவட்டம் தவிட்டுப்பாளையம் அருகே மூன்று தெரு நாய்கள் ஆட்டுக்குட்டியை துரத்திச் சென்று கடிக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இதனை கண்ட பொதுமக்கள் நாய்களை விரட்டி அடித்ததால் ஆட்டுக்குட்டி உயிர் தப்பியது. தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருவதால் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
