மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (03.08.2025) ThanthiTV

Update: 2025-08-03 08:47 GMT

 கூட்டணியில் இருந்து விலகிய ஓபிஎஸ்-ஐ அமித்ஷா சமாதானப்படுத்தி மீண்டும் கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும்...... அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தல்....

திமுக பக்கம் ஒ.பன்னீர்செல்வம் செல்வது துரோகத்தின் வெளிப்பாடு என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம்.... நிதானமாக செயல்பட்டு இருக்கலாம் என்றும் கருத்து....

பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ள முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்-க்கு நல்ல நேரம் பிறந்துள்ளது.... விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கருத்து....

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பகுதி மலைப்பகுதியில் தடையை மீறி மாடு மேய்க்கும் போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான்.... மாடுகள் மேய்ந்தால்தான் மலைகள் காக்கப்படும் என்றும் கருத்து....

நடிகர் மதன் பாப் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வரும் அரசியல் மற்றும் திரைப்பிரபலங்கள்..... அமைச்சர் மா.சுப்பிரமணியன், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நடிகர் நாசர், இயக்குநர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி....


திருப்பத்தூர் அருகே காணாமல்போன மாணவன் பள்ளி கிணற்றில் சடலமாக மீட்பு... பூட்டப்பட்ட கிணற்றில் சடலமாக கிடந்த மாணவன் குறித்து போலீசார் விசாரணை....

கவின் ஆணவப்படுகொலை விவகாரம் தொடர்பாக தேசிய பட்டியலின ஆணையம் நாளை விசாரணை... பட்டியலின ஆணைய தலைவர் கிஷோர் மக்வானா நேரில் விசாரணை செய்யா முடிவு.....

தமிழகத்தில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில் கரூர் மாயனூர் காவிரி ஆற்றில் பக்தர்கள் நீராட தடை..... அரசு தடை விதித்திருப்பதால் பொதுமக்கள் ஏமாற்றம்....

வெள்ளப் பெருக்கு அபாயம் காரணமாக ஈரோடு மாவட்டம் கொடிவேரி அணையில் குளிக்கத் தடை.... ஆடிப்பெருக்கு விழா நாளில் வெறிச்சோடிக் காணப்படும் கொடிவேரி அணை....

World Championship of Legends கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது ஏ.பி டிவில்லியர்ஸ் தலைமையிலான தென் ஆப்பிரிக்கா.... இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை சாய்த்து அபாரம்....

Tags:    

மேலும் செய்திகள்