மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (15.08.2025) | 1 PM Headlines | ThanthiTV

Update: 2025-08-15 08:05 GMT
  • டெல்லியில் பிரதமர் தேசியக்கொடி ஏற்றிய பின், முப்படை வீரர்கள் அணிவகுப்பு... ராணுவ ஹெலிகாப்டரில், மலர்தூவி மரியாதை.....
  • 79வது சுதந்திர தினம், நாடு முழுவதும் உற்சாக கொண்டாட்டம்.....டெல்லி செங்கோட்டையில் 12வது முறையாக தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர் மோடி....
  • அவசர நிலையை அமல்படுத்தி அரசியலமைப்பு கொன்ற பாவிகளை எந்த தலைமுறையும் மறக்க கூடாது என பிரதமர் மோடி ஆவேசம்..இந்திய அரசியலமைப்பிற்கான நமது அர்ப்பணிப்பை மேலும் வலுப்படுத்துவதன் மூலம் நாம் முன்னேற வேண்டும்.
  • சிந்து நதி இந்தியாவுக்கு தான் முழு அதிகாரம்...ரத்தமும் தண்ணீரும் ஒருங்கே பாய முடியாது என பிரதமர் மோடி உரை..
  • சொந்த விண்வெளி நிலையத்தை கட்டமைக்க தேவையான பணிகளை செய்து வருவதாக பிரதமர் மோடி பெருமிதம்...சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்று திரும்பியஇந்திய வீர‌ர் சுபான்ஷு சுக்லாவுக்கு வாழ்த்து...
  • பஹல்காம் தாக்குதலுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் இந்தியாவின் சக்தியை உலகம் கண்டது...உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை கொண்டு எதிரிக்கு பதிலடி கொடுக்கப்பட்டதாக பிரதமர் பேச்சு...
  • 3 கோடி இளைஞர்களுக்காக பல்வேறு துறைகளில்வாய்ப்புகளை உருவாக்கி வருகிறோம்...வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் வளர்ச்சியடைந்த பாரதம் திட்டம் செயல்படுத்தப்படும் என பிரதமர் மோடி உத்தரவாதம்...
  • விவசாயிகள் நலனில் இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யாது...அமெரிக்காவின் வரி உயர்வு மிரட்டலுக்கு பிரதமர் மோடி பதிலடி
  • டாலர், பவுண்டுகளை சார்ந்திருப்பது தற்சார்பு அல்ல என பிரதமர் மோடி பேச்சு...நாட்டின் நம்பிக்கை நமது திறன்கள், சொந்தமாக நிற்கும் வலிமையை பற்றியது என கருத்து
  • பாகிஸ்தானின் அணுஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒரு போதும் அஞ்சாது....எதிரிகள் மீண்டும் முயன்றால் எங்கு, எப்போது தாக்குதல் என்பதை நமது படைகள் தீர்மானிக்கும் என பிரதமர் மோடி உறுதி...
  • தீபாவளி பண்டிகைக்கு பின் ஜிஎஸ்டி வரி முறையில்சீர்திருத்தம் கொண்டுவரப்படும் என பிரதமர் மோடி உத்தரவாதம்....நாட்டு மக்களுக்கு இரட்டை தீபாவளியாக இருக்கும் என பேச்சு...
Tags:    

மேலும் செய்திகள்