வானில் சிதறிய சீனா, பாக்,கின் மானம்..."எங்களுக்கும் `ஆகாஷ் ' வேண்டும்..." இந்தியாவை தேடி வரும் நாடு

Update: 2025-07-03 17:14 GMT

வானில் சிதறிய சீனா, பாக்,கின் மானம்..."எங்களுக்கும் `ஆகாஷ் ' வேண்டும்..." இந்தியாவை தேடி வரும் முக்கிய நாடு

ஆபரேஷன் சிந்தூரில் பாகிஸ்தான் ஏவிய ஏவுகணைகளையும், ட்ரோன்களையும் வானிலேயே தகர்த்த இந்திய தயாரிப்பு ஆகாஷ் வான் பாதுகாப்பு கட்டமைப்பை வாங்க பிரேசில் ஆர்வம் காட்டுவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

ஆபரேஷன் சிந்தூரில்... பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் தகர்க்கப்பட்டதாக இருக்கட்டும், பாகிஸ்தான் விமானப்படை தளங்கள், ராணுவ தளங்கள் தகர்க்கப்பட்டதாக இருக்கட்டும்... தாக்குதல்களை மிக துல்லியமாக நடத்தியது இந்திய விமானப்படை. அதேவேளையில் இந்தியாவை நோக்கி பாகிஸ்தான் ஏவிய ஏவுகணைகளையும், ட்ரோன்களையும் இந்திய வான் பாதுகாப்பு கட்டமைப்புகள் வானிலேயே சிதறடித்தன. அதில் நடுநாயகமாக கவனம் பெற்றது ஆகாஷ் வான் பாதுகாப்பு கட்டமைப்பு...

Tags:    

மேலும் செய்திகள்