6 மாணவிகளிடம் அசிங்கத்தை செய்த ஆசிரியர் - முறையிட்ட சிறுமிகள்..

Update: 2025-08-22 15:26 GMT

நீலகிரி மாவட்டம் கூடலூரில் 6 பழங்குடியின மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பள்ளி ஆசிரியரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதி நடுவே உள்ள அரசு பழங்குடியின உண்டு உறைவிட பள்ளியில் மாரியப்பன் என்பவர் முதுகலை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன் அந்த பள்ளியில் பணிபுரியும் ஆசிரியை ஒருவரிடம் 6 மாணவிகள், தங்களிடம் ஆசிரியர் மாரியப்பன் தவறாக நடந்து கொண்டதாக கூறியுள்ளனர். விசாரணையில் ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியான நிலையில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும் இது குறித்து கூடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் தென்காசியில் தலைமறைவாக இருந்த ஆசிரியரை தனிப்படை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்