கன்னியாகுமரி மாவட்டத்தில் பேய்கள் சொர்க்கத்திற்கு அழைப்பதாக கூறி இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குருந்தன்கோடு காட்டேறி பகுதியை சேர்ந்த இசக்கிமுத்து என்பவர் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். தகவலறிந்து வந்த போலீசார் உடலை மீட்ட போலீசார், அவரது வீட்டில் நடத்திய சோதனை இசக்கிமுத்து தற்கொலைக்கு முன்பு எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியது. அதில் தன்னை 2 பேர் பேய்கள் சொர்க்கத்திற்கு அழைப்பதாகவும், அதனால் அதனுடன் செல்வதாகவும் எழுதி வைத்திருந்ததால் போலீசார் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.