பள்ளி மாணவியை திருமணம் செய்வதாக கூறி கடத்திய இளைஞர் - கோவையில் அதிர்ச்சி

Update: 2025-06-15 14:55 GMT

கோவை அருகே 16 வயது பள்ளி மாணவியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்ற பள்ளி பேருந்து ஓட்டுனரை போலீசார் கைது செய்தனர்..

கோவை மாவட்டத்தை சேர்ந்த அந்த சிறுமி தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சிறுமியை காணவில்லை என பெற்றோர் புகார் அளித்தனர். போலீசார் விசாரணையில், சிறுமி பயிலும் பள்ளியில் ஓட்டுனராக பணியாற்றிய சுரேஷ்குமார் என்பவர் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தியது தெரிய வந்தது. இதனையடுத்து சுரேஷ் குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீசார் சிறுமியை மீட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்