Chennai Ladies Hostel | லேடிஸ் ஹாஸ்டலுக்குள் புகுந்து பெண்ணிடம் அத்துமீறிய இளைஞர் - சென்னையில் பகீர் சம்பவம்
சென்னை வேளச்சேரியில் விடுதி அறைக்குள் புகுந்து தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் அநாகரிகமாக நடந்து தப்பியோடிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வேளச்சேரி தண்டீஸ்வரன் நகரில் உள்ள தனியார் விடுதியில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம், இளைஞர் ஒருவர் அநாகரிகமாக நடந்துள்ளார். அந்தப் பெண் கூச்சலிட்டதும், தப்பியோடிய அந்த நபரை விடுதி பாதுகாவலர்களாலும் பிடிக்க முடியவில்லை. இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில், புதுக்கோட்டை திருமயத்தைச் சேர்ந்த லட்சுமணன் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.