Nellai Viral Video | கண்ணை கட்டிக்கொண்டே பிசிறு தட்டாமல் செய்யும் இளைஞர் - இணையத்தை கலக்கும் வீடியோ
நெல்லை மாவட்டம் காருக்குறிச்சியில் இளைஞர் ஒருவர் கண்ணை கட்டிக்கொண்டு மண் பானைகளை செய்து வருகிறார். முருகேஷ் என்ற 22 வயது இளைஞர், படித்துவிட்டு தனது தந்தையின் தொழிலை கவனித்தார். பாரம்பரிய தொழிலை காக்கவேண்டும் என்பதே அவருக்கு உந்துதலாக இருந்தது. மண்பானை செய்வதை கற்றுத்தேர்ந்த இவர், ஒரு கட்டத்தில் கண்ணை மூடிக்கொண்டே மண் பானைகளை செய்யும் அளவிற்கு திறன் பெற்றார். இவரது வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.