"நீ வராத.. அவசரமா ஏன் வர்ற.." - சில்லறை கேட்ட பயணிகளிடம் திமிராக பேசிய கண்டக்டர்..
சில்லரை இருந்தால் பேருந்தில் ஏறுங்கள் - நடத்துனர் அடாவடி
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அரசு பேருந்தில் பயணிகளிடம் நடத்துனர் சில்லறை தராமல் ஆணவமாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி வழியாக திண்டிவனம் சென்ற அரசு பேருந்தில் நடத்துனரிடம் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிய பிறகு, சில்லறை கொடுக்காமல் இருந்துள்ளார். பயணிகள் நடத்துனரிடம் சில்லரை கேட்டதற்கு, என்னிடம் எங்கே சில்லறை இருக்கிறது என்று கேட்டு சில்லறை இருந்தால் கொடுக்க மாட்டேனா, என்றும் எதற்காக வண்டியில் ஏறினீர்கள் சில்லரை இருந்தால் ஏறுங்கள் இல்லை என்றால் ஏறாதீர்கள் என்று ஆணவமாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.