Udhayanidhi Stalin | "மகளிர் உரிமைத்தொகை" - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சொன்ன குட் நியூஸ்
மகளிர் உரிமைத்தொகை" - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சொன்ன குட் நியூஸ்
விடுப்பட்ட மகளிருக்கு உரிமைத்தொகை எப்போது?
தமிழகத்தில் விடுப்பட்ட மகளிருக்கு எப்போது உரிமைத்தொகை வழங்கப்படும் என்பது குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் மாநில, மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு மணிமேகலை விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், விடுபட்ட மகளிரை திட்டத்தில் இணைப்பதற்கான முதற்கட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.