சாலையில் மதுவை ஊற்றி பெண்கள் போராட்டம்
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த மதுபான கடைக்குள் புகுந்த பெண்கள், மதுபாட்டில்களை எடுத்து வந்து சாலையில் மதுவை ஊற்றி போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. செங்குறிச்சி அருகே குரும்பப்பட்டியில் நெடுஞ்சாலை பகுதிகளில் இயங்கும் இந்த கடையால் ஆங்காங்கே வாகனங்கள் நிறுத்தப்பட்டு, போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், அங்கு குடியிருப்புகள் மற்றும் அரசு மருத்துவமனைக்கு அருகில் செயல்படும் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரியும் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.