சாலையில் உலா வந்த காட்டு யானைகள் | அச்சத்தில் உறைந்த வாகன ஓட்டிகள்..!

Update: 2025-07-10 16:52 GMT

சாலையில் உலா வந்த காட்டுயானைகள் - வாகன ஓட்டிகள் அச்சம்

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட விளாமுண்டி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய இரண்டு காட்டு யானைகள் புஞ்சை புளியம்பட்டி - பவானிசாகர் சாலையில் நால்ரோடு பகுதியில் சுற்றி திரிந்தன. இதனைக் கண்ட வாகன ஓட்டிகள் அச்சமடைந்து வாகனத்தை நிறுத்தினர். சிறிது நேரம் உலாவந்த காட்டு யானைகள் பின்னர் மெதுவாக வனப்பகுதிக்குள் சென்றன.

இரவு நேரங்களில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் வாகனங்களில் செல்வோர் எச்சரிக்கையுடன் செல்லுமாறு வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்